விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நரேந்திர சிங் தோமர் அவசர ஆலோசனை

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நரேந்திர சிங் தோமர் அவசர ஆலோசனை
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில், டெல்லி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அதுபற்றி ஆலோசித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நரேந்திர சிங் தோமர், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களது போராட்டம் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் 6ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது.
டெல்லி-உத்தரப்பிரதேச எல்லையில், காசிப்பூர்-காஜியாபாத் பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்பரண்களை டிராக்டர் மூலம் உடைத்துக் கொண்டு, டெல்லி நோக்கி சென்றனர்.
Comments