தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் எம்எல்சியானாலும் அமைச்சராக முடியாது - கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

0 933
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் எம்எல்சியானாலும் அமைச்சராக முடியாது - கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்எல்ஏ தகுதியை இழந்தவர் எம்எல்சியானாலும், அமைச்சராக முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருந்த விஸ்வநாத் என்பவர் கடந்த ஆண்டு ஜூலையில் 16 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பாஜகவில் சேர்ந்தார். அதனால் எடியூரப்பா முதலமைச்சரானார்.

பின்னர் கடந்த டிசம்பரில் நடந்த இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார்.

ஆனால் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் காரணமாக அவர் எம்எல்சியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க முயன்ற நிலையில் அதற்கு எதிராக  கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் மட்டுமே அமைச்சராக முடியும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments