தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மின்னணு வாயிலாக அஞ்சல் வாக்குப்பதிவு ?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மின்னணு வாயிலாக அஞ்சல் வாக்குப்பதிவு ?
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாட்டு இந்தியர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுக்காக ETPBS எனப்படும் மின்னணு வாயிலான அஞ்சல் வாக்களிக்கும் முறை தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திற்கு தகவல் அளித்துள்ளது.
இது தொடர்பான ஒரு சட்ட மசோதா கடந்த நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும், அவையின் ஆயுள் முடிந்ததால் அது நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், அவசரச் சட்டம் வாயிலாக அதற்கு அனுமதி கொடுக்கலாம் என தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு கோடி வெளிநாட்டு இந்தியர்களில் 60 லட்சம் பேருக்கு வாக்களிக்கும் தகுதி உள்ளது.
Comments