காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த காதலி

கள்ளக்குறிச்சியில் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த காதலனை கூலிப்படையை ஏவி காதலியே கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர் நேற்று இரவு வீட்டுக்கு அருகில் உள்ள ஏமப்பேர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 6பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த ரியாஸ் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் ரியாஸ் சென்னையை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், பின்னர் அவரை விட்டுவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த சென்னை காதலி கூலிப்படையை ஏவி ரியாசை கொல்ல முயற்சித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments