ஊரடங்குத் தளர்வையடுத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் பாலிவுட் திரையுலகம்

0 1814
ஊரடங்குத் தளர்வையடுத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் பாலிவுட் திரையுலகம்

கொரோனாவால் கடந்த ஏழெட்டு மாதங்களாக முடங்கிக் கிடந்த பாலிவுட் திரைப்படத்துறையினர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர்.

மும்பையில் அக்டோபர் மாதம் சிவசேனா அரசு அறிவித்த ஊரடங்குத் தளர்வை அடுத்து, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான படப்பிடிப்புகள் வேகம் அடைந்துள்ளன. பல மாதங்களாக புதிய படங்களில் நடிக்காமல் இருந்த நடிகர் ஷாருக்கான் பத்தான் என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

நேற்று நீண்ட தலைமுடியுடன் வந்த ஷாருக்கான் படப்பிடிப்பில் பங்கேற்றார். இப்படத்தில் சல்மான் கானும் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments