நெல்லை சந்திப்பு ரயில்வே கிராசிங் அருகே தீ விபத்தால் 2 மணி நேரம் ரயில்கள் நிறுத்தம்

0 762
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே மருதமரம் தீப்பிடித்து எரிந்ததால் 2 மணி நேரம் ரயில்கள் நிறுத்தப்பட்டன.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே மருதமரம் தீப்பிடித்து எரிந்ததால் 2 மணி நேரம் ரயில்கள் நிறுத்தப்பட்டன.

மீனாட்சிபுரம் ரயில்வே கிராசிங் அருகே மரம் தீப்பிடித்து எரிந்ததும் கேட் கீப்பர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எரிந்த மரம் தண்டவாளத்தில் விழக்கூடும் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழியாக இயக்கப்பட்ட கன்னியாகுமரி, அனந்தபுரி விரைவு ரயில்கள் டீசல் எஞ்சின் மாற்றப்பட்டு இயக்கப்பட்டன.

இதனால் 2 மணி நேரம் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments