அமெரிக்க பாலைவனத்தில் நிறுவப்பட்ட உலோக தூண் மாயமானது

0 3257
அமெரிக்க பாலைவனத்தில் நிறுவப்பட்ட உலோக தூண் மாயமானது

அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் திடீர் மாயமாகி உள்ளது.

அந்த நாட்டின் யூடா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18-ம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது பாலைவனத்தில் யாரும் இல்லாத இடத்தில் 12 அடி உயரம் கொண்ட சில்வர் தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

உலோக தூண் யாரால் நிறுவப்பட்டிருக்கும் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் அந்த உலோக தூண் நேற்று இரவு மாயமாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த ஊள்ளூர் போலீசார் முடிவு செய்துள்ளதாக யூடா நில மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments