கொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க மருத்துவ நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டுமென மருத்துவ நிறுவனங்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டுமென மருத்துவ நிறுவனங்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் அவர் ஆமதாபாத், ஐதராபாத், புனே நகரங்களில் தடுப்பூசி உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில், தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபடும், புனேவைச் சேர்ந்த ஜெனோவோ பயோபார்மா, ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ, டாக்டர் ரெட்டிஸ் ஆகிய குழுவினருடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.
அப்போது பேசிய மோடி, கொரோனாவை தடுக்க மருந்து உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை பாராட்டினார். கொரோனா தடுப்பூசி வழங்கும் முறை குறித்த ஆலோசனைகளை தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். தடுப்பூசி குறித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Comments