பாகிஸ்தானில் இருந்து கம்போடியாவிற்கு கொண்டு செல்லப்பட்ட காவன் யானை

உலகின் ஒரே தனிமையான யானை எனப்படும் காவன் யானை, பாகிஸ்தானில் இருந்து கம்போடியா நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
உலகின் ஒரே தனிமையான யானை எனப்படும் காவன் யானை, பாகிஸ்தானில் இருந்து கம்போடியா நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் பல ஆண்டு காலம் தனிமையில் கழித்த காவன் யானை, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த யானையை இடம் மாற்றக்கோரி விலங்கு நல ஆர்வலர்கள் குரல் கொடுத்து வந்தனர்.
இதனையடுத்து, யானையை இடம் மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 10 மணி நேர பயணத்திற்கு பிறகு கம்போடியா சென்றடைந்தது.
சியாம் ரீப் விமான நிலையம் வந்தடைந்த யானையை பிரபல அமெரிக்க பாடகி செர் (Cher) வரவேற்றார்.
Comments