கொரோனா தடுப்பூசியை உலகெங்கும் கொண்டு செல்லும் சவாலான பணிக்கு தயாராகும் விமான நிறுவனங்கள்

கொரோனா தடுப்பூசிகளை உலகின் மூலை முடுக்கிற்கெல்லாம் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை விமான நிறுவனங்கள் துரிதகதியில் செய்து வருகின்றன.
கொரோனாவால் வருவாய் முடங்கி பெரும் பாதிப்புக்கு ஆளான பல விமான நிறுவனங்கள் இந்த தடுப்பூசி போக்குவரத்து மூலம் ஓரளவு அதில் இருந்து மீளமுடியும் என்ற எண்ணத்தில் உள்ளன.
பைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் ஏப்ரல் மாத வாக்கில் தயாராகிவிடும் என்ற நம்பிக்கையில் அவற்றை பெரிய அளவில் கொண்டு செல்லும் வேலைகளை லுப்தான்சா செய்து வருகிறது.
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொண்டு செல்ல வேண்டிய சவாலும் உள்ளது.
எனவே, கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்வது, இதுவரை இல்லாத வகையிலான பெரிய, சிக்கல் நிறைந்த சரக்குப் போக்குவரத்தாக இருக்கும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை உலகெங்கும் கொண்டு செல்லும் சவாலான பணிக்கு தயாராகும் விமான நிறுவனங்கள்#CoronaVaccine | #Airlines | #CovidVaccine | #Covid19
— Polimer News (@polimernews) November 30, 2020
https://t.co/b2MUDe6ddy
Comments