வடமாநில இளைஞர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு... கத்தியைப் பிடுங்கி செல்போன் கொள்ளையனைக் குத்திக் கொன்ற இளைஞர்கள்

வடமாநில இளைஞர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு... கத்தியைப் பிடுங்கி செல்போன் கொள்ளையனைக் குத்திக் கொன்ற இளைஞர்கள்
திருப்பூரில் தங்களிடம் கத்தியைக் காட்டி செல்போன் பறித்துக் கொண்டு ஓடிய நபரை விரட்டிப் பிடித்த வடமாநில இளைஞர்கள் இருவர், அதே கத்தியால் அவரை குத்திக் கொன்றனர்.
தென்னம்பாளையம் பகுதியில் தினேஷ்குமார், சத்திரி என்ற 2 வடமாநில இளைஞர்கள் நள்ளிரவு பணி முடிந்து நடந்து வந்துகொண்டிருந்தனர். அவர்களை வழிமறித்த மர்ம நபர் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனையும் 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு ஓடியதாகக் கூறப்படுகிறது.
செல்போன் கொள்ளையனை விரட்டிச் சென்று மடக்கிய வடமாநில இளைஞர்கள், கத்தியை பிடுங்கி அவனை குத்திக் கொன்றுவிட்டு, தங்களது பொருட்களை எடுத்துச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர்.
கொலையான நபர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்றும், சாலையோரம் வசித்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
Comments