ஆஸ்திரேலியாவை அவமதிக்கும் வகையில் சீனா வெளியிட்ட புகைப்படம் : மன்னிப்பு கேட்க ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தல்

0 3300
ஆஸ்திரேலியாவை அவமதிக்கும் வகையில் சீனா வெளியிட்ட புகைப்படம் : மன்னிப்பு கேட்க ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தல்

ஆஸ்திரேலியாவை அவமதிக்கும் வகையில் டுவிட்டரில் படம் வெளியிட்ட சீனா அதற்காக வெட்கப்படுவதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் காட்டமாக கூறியுள்ளார்.

ஆப்கன் குழுந்தையின் கழுத்தில் ஆஸ்திரேலிய படை வீரர் ஒருவர் கத்தியை வைப்பது போன்ற படத்தை சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் சவோ லிஜியான் வெளியிட்டார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் ஸ்காட் மோரிசன், இது போன்ற போலியான புகைப்படத்தை சீனா வெளியிட்டது மூர்க்கத்தனமான செயல் என கூறியுள்ளார்.

இந்த செயலால் உலக நாடுகளுக்கு முன்னர் சீனா சிறுமைப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments