வெள்ளை மாளிகை பட்ஜெட் துறை தலைவராக இந்திய -அமெரிக்க பெண்மணி ?

வெள்ளை மாளிகை பட்ஜெட் துறை தலைவராக இந்திய -அமெரிக்க பெண்மணி ?
வெள்ளை மாளிகையின் அதிகாரம் மிக்க பதவியான பட்ஜெட் துறைத் தலைவர் பொறுப்பை இந்திய வம்சாவளியினரான நீரா தாண்டனுக்கு வழங்க புதிய அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.
இந்த நியமனத்திற்கு செனட் சபையின் ஒப்புதல் கிடைத்தால், அந்த பதவிக்கு வரும் முதலாவது ஆசிய-அமெரிக்க பெண்மணி என்ற பெருமையை நீரா தாண்டன் பெறுவார்.
50 வயதான நீரா தாண்டன், இப்போது, Centre for American Progress என்ற அரசு கொள்கை அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார்.
நிதி அமைச்சராக ஜேனட் எல்லனை நியமிக்க உள்ள ஜோ பைடன், அவருடன் சேர்ந்து சுதந்திரமான பொருளாதார கொள்கைகளை வகுப்பதற்கான குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளார்.
அதன் ஒரு படியாகவும் நீரா தாண்டனின் நியமனம் பார்க்கப்படுகிறது.
Comments