கொரோனா தடுப்பூசி குறித்து டிச.4 ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

0 1061
கொரோனா தடுப்பூசி குறித்து டிச.4 ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

கொரோனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி, ஆலோசனை நடத்தினார்.

புனேயில் உள்ள ஜென்னோவா பயோபார்மசூட்டிகல்ஸ், ஐதராபாத்தில் உள்ள பயாலஜிகல் இ நிறுவனம் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேபை சேர்ந்த குழுக்களிடம் பிரதமர் பேசினார்.

அப்போது, தடுப்பூசியை பற்றி மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குமாறு அவர் விஞ்ஞானிகளை கேட்டுக் கொண்டார்.

இதனிடையை, கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பூசி முன்னேற்றம் குறித்து வரும் 4 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments