சாங் இ-5 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான சீனா அடுத்தக்கட்ட நடவடிக்கை

0 902
சாங் இ-5 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான சீனா அடுத்தக்கட்ட நடவடிக்கை

சாங் இ-5 (Chang'e-5) விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையை சீன தேசிய விண்வெளி மையம் (China National Space Administration) மேற்கொண்டுள்ளது.

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அந்த விண்கலத்தை சீனா கடந்த 23ம் தேதி செலுத்தியது. அந்த விண்கலம், நிலவின் வட்ட பாதைக்குள் (spacecraft entered orbit around the moon Saturday) சனிக்கிழமை நுழைந்ததையடுத்து, அதிலிருக்கும் லேண்டர் - அசென்டர் சாதனம் மற்றும் ஆர்பிடர் - சேம்பிள் ரிட்டர்ன் வாகனத்தை தனித்தனியாக பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்த முயற்சி இன்று காலை 4.40 மணிக்கு வெற்றியடைந்துள்ளது.

இதையடுத்து உரிய நேரத்தில் லேண்டர்- அசென்டரை தரையிறக்கி, மாதிரிகளை (rock samples) எடுத்து வர சீனா முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments