கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு என 5 கோடி இழப்பீடு கேட்ட சென்னை நபரிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்க சீரம் இந்தியா முடிவு

0 8222
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு என 5 கோடி இழப்பீடு கேட்ட சென்னை நபரிடம் ரூ100 கோடி இழப்பீடு கேட்க சீரம் இந்தியா முடிவு

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதால் மோசமான நரம்பு மற்றும் உளவியல் பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறி 5 கோடி இழப்பீடு கேட்ட சென்னை நபர் மீது 100 கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு தொடரப்படும் என சீரம் இந்தியா தெரிவித்துள்ளது.

சென்னை நபரின் குற்றச்சாட்டுக்கள் தவறானதும், தீங்கிழைப்பதுமானதும் ஆகும் என சீரம் இந்தியா கூறியுள்ளது. தடுப்பூசி சோதனைக்கு ஆட்படும் நபர் அதன் விளைவுகளை தாமே ஏற்கவேண்டும்  என அந்த நபருக்கு மருத்துவ குழுவினர் முன்னரே அறிவுறுத்தி விட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாகவும் சீரம் இந்தியா கூறுகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனாவின் தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கும் சீரம் இந்தியா, அதற்கான இறுதிக்கட்ட கிளினிகல் சோதனைகளை நாடு முழுதும் நடத்துகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments