அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன் - ரஜினி அறிவிப்பு

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன் அதுவரை பொறுத்திருங்கள் என ரஜினி தன் அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
மன்ற நிர்வாகிகள் உங்களில் சிலர் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்படுகிறீர்கள். அது தொடர்பான அனைத்து தகவல்களும் என்னிடம் உள்ளது என இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினி தெரிவித்துள்ளார்.
மேலும் பலமுறை எச்சரித்தும் நீங்கள் என் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை உங்களுடைய செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை எனவும் ரஜினி கூறியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் எப்படி அரசியலில் கட்சி தொடங்கி மக்களிடம் பெயர் வாங்க முடியும் என ரஜினி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் சம்பாதிக்கும் எண்ணத்தோடு யாரும் என்னுடன் அரசியலில் இருக்க முடியாது, மக்களுக்காக உழைக்க வேண்டும்
எனவும் ரஜினி கூறி இருக்கிறார். இவ்வாறாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததை ஒட்டி, இனி தனித்தனியாக மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Comments