அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது- ரஜினி

0 5483
அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது- ரஜினி

மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை

அரசியல் நிலைப்பாடு குறித்து நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்துகிறார்

ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு ரஜினி அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல்

அரசியல் நிலைப்பாடு குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கருத்துகளை கேட்கிறார்

நிர்வாகிகள் ஒவ்வொருவராக அரசியல் குறித்து கருத்துகளை கூறி வருகின்றனர்

மக்கள் மன்ற தலைமை நிர்வாகிகளை சந்தித்த பிறகு மா.செ., கூட்டத்தில் ரஜினி பங்கேற்பு

சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று மா.செயலாளர்கள் வலியுறுத்தல்

முதலமைச்சர் வேட்பாளராக ரஜினியே இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தல்

மாவட்ட வாரியாக மக்கள் மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களும் கூறப்படுகின்றன

கடந்த 3 வருடங்களாக மக்கள் மன்றம் சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆலோசனை

தொகுதிவாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் நிர்வாகிகள் எடுத்துரைக்கின்றனர்

புதிய கட்சி? - ரஜினி ஆலோசனை

நிர்வாகிகளின் மன்ற செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை என்று ரஜினி கூறியதாக தகவல்

அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுப்பேன், பொறுத்திருங்கள் என ரஜினி கூறியதாக தகவல்

சில மாவட்ட நிர்வாகிகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ரஜினி கூறியதாகவும் தகவல்

அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது - ரஜினி

என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் - ரஜினி

பலமுறை எச்சரித்தும் நிர்வாகிகள் சிலர் செயல்பாடுகளில் மாற்றம் இல்லை - ரஜினி

தற்போது மாவட்டச் செயலாளர்களை ரஜினி தனித்தனியாக அழைத்து பேசி வருவதாக தகவல்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments