கோவிஷீல்டு பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மீது ரூ 100 கோடி இழப்பீடு கேட்க சீரம் நிறுவனம் முடிவு

0 3273

கொரோனா தடுப்பூசி பரிசோதனையால் உடல்நலம்  பாதிக்கப்பட்டதாக கூறிய நபர் மீது சீரம் நிறுவனம் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது.

தன்னார்வலர் ஒருவரின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள மருத்துவ பிரச்சனைகளுக்கும், தடுப்பூசி சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனேகா நிறுவனத்துடன் இணைந்து புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி வருகிறது.

மத்திய அரசின் அனுமதியுடன் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 40 வயதான தன்னார்வலர் ஒருவருக்கு கடந்த மாதம் 1ஆம் தேதி கோவிஷீல்டு மருந்து செலுத்தப்பட்டது. இதில் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments