மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட தங்கும் விடுதிகள்

0 386

இங்கிலாந்தில் வாடகை குகை வீடுகளில் தங்குவது பிரபலமாகி வருகிறது. வொர்சஸ்டர்ஷயர் ((Worcestershire)) என்ற இடத்தில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான பெரிய குகை ஒன்றை பார்த்த ஏஞ்சலோ என்ற தொழிலதிபர், அதைக் குடைந்து தங்கும் விடுதிகளை உருவாக்கத் திட்டமிட்டார்.

image

தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டன. இருவர் தங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கல் அறைகளைச் சுற்றி அடர்ந்த வனப்பகுதி, சுத்தமான ஆற்று மற்றும் ஊற்று நீர், புவி வெப்பத்தில் இயங்கும் வைஃபை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்கு நாள் ஒன்றுக்கு 195 பவுண்டு வாடகையாக வசூலிக்கப்படுகிறது.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments