லடாக் எல்லையில் கட்டுமானப் பணிகளை நடத்தும் சீனாவின் செயல் போரைத் தூண்டுவதாக உள்ளது-அமெரிக்க எம்.பி

0 2256
லடாக் எல்லையில் கட்டுமானப் பணிகளை நடத்தும் சீனாவின் செயல் போரைத் தூண்டுவதாக உள்ளது-அமெரிக்க எம்.பி

லடக்கில் இந்திய எல்லையை ஒட்டி சீனா கட்டுமானப் பணிகளை நடத்துவது உண்மையானால், அது போரைத் தூண்டும் ஒரு நடவடிக்கையாக இருக்கும் என அமெரிக்க எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் உளவுத்துறை நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ள முதலாவது இந்திய வம்சாவளி எம்பியான அவர், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதை கூறினார்.

லடாக்கில் சீனா கட்டுமானங்களை நடத்துவதற்கு ஆதாரமாக சாட்டிலைட் படங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். இதே போன்று தென் சீனக் கடலிலும் தீவுகளை உருவாக்கி  அங்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments