சுங்கச்சாவடியில் கட்டணக்கொள்ளை.! தட்டிக்கேட்டால் அடியாட்கள் மிரட்டல்.!

0 4270
சுங்கச்சாவடியில் கட்டணக்கொள்ளை.! தட்டிக்கேட்டால் அடியாட்கள் மிரட்டல்.!

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அக்கரைக்குச் செல்லும் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் முறை செயல்படாத நிலையில் கட்டணக் கொள்ளை நடப்பதாக வாகன ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து தட்டிக் கேட்டால், குண்டர்கள் மிரட்டுவதாக, புகார் எழுந்துள்ளது.

சென்னை பெருங்குடியில் இருந்து சோழிங்கநல்லூர், நாவலூர், கேளம்பாக்கம் வழியாகச் செல்லும் ராஜீவ்காந்தி சாலையில் மொத்தம் 5 இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன. இந்தச் சுங்கச் சாவடிகளில் கடந்த சில நாட்களாக பாஸ்டேக் முறை செயல்படவில்லை. விதிமுறைப்படி எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் கட்டணம் இல்லாமல் வாகனங்களை அனுப்பிவிட வேண்டும்.

ஆனால் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் முறை பழுதடைந்த நிலையில் ஆட்களைக் கொண்டு அடாவடியாகச் சுங்கக் கட்டணம் பெற்று வருகின்றனர். நாவலூரில் சுங்கக்கட்டணம் செலுத்திவிட்டுச் சோழிங்கநல்லூர் வழியாக அக்கரைக்குச் செல்லும்போது அங்குள்ள சோதனைச் சாவடியிலும் வலுக்கட்டாயமாக மீண்டும் கட்டணம் பெறுகின்றனர்.

பாஸ்டேக் முறை செயல்படாதது குறித்தும், முந்தைய சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தியது குறித்தும் எடுத்துக் கூறினாலும் அதையெல்லாம் செவிகொடுத்துக் கேட்காமல் அடாவடியாகக் கட்டணம் பெறுவதாக வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர், ஒளிப்பதிவாளரையும் சுங்கச் சாவடி ஊழியர்கள் மிரட்டுவதாக, புகார் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments