மாமல்லபுரம் அருகே ஐம்பொன் சுவாமி சிலையுடன் பிடிபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

0 703
மாமல்லபுரம் அருகே ஐம்பொன் சுவாமி சிலையுடன் பிடிபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே ஐம்பொன் சிலை திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், நெருப்பூர் வேல்முருகன், வீராபுரம் செல்வம் மற்றும் செபஸ்தியான் ஆகிய மூவர் நேற்று சிக்கினர். பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலையை பறிமுதல் செய்த போலீசார், இவர்கள் மூவரையும், கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி விஜயகுமார் இல்லத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணையை நடத்திய நீதிபதி மூவரையும் வரும் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தர விட்டார். இந்த ஐம்பொன் சிலை, தமிழகத்தில் எந்த கோவிலில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டது ? என சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments