2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடி ஆட்டம்... இந்திய அணிக்கு 390 ரன்கள் வெற்றி இலக்கு

2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடி ஆட்டம்... இந்திய அணிக்கு 390 ரன்கள் வெற்றி இலக்கு
சிட்னியில் இன்று நடைபெறும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு 390 ரன்களை ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அந்த அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் ஆரோன் பின்ஞ் முறையே 83 மற்றும் 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கடுத்து, களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி, நடப்பு ஒருநாள் தொடரில் 2ஆவது சதத்தை விளாசினார்.
104 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் ஆட்டமிழக்க, மார்னசுடன், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மார்னஸ் தனது பங்குக்கு 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 63 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 389 ரன்கள் குவித்தது.
Comments