திமுக ஆட்சி அமைந்தால் கல்வி, வேலைவாய்ப்பு அனைவருக்குமானதாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்தால் கல்வி, வேலைவாய்ப்பு அனைவருக்குமானதாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால், கல்வி, வேலைவாய்ப்பு என்பது அனைவருக்குமானதாக இருக்கும் என அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக அவர் பேசினார்.
கல்வியில், வேலைவாய்ப்பில், சுகாதாரத்தில், வேளாண்மையில் தொழில் துறையில், ஏற்றுமதி வர்த்தகத்தில் என அனைத்துத் துறையிலும் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை உருவாக்கித் தரும் ஆட்சியாக, திமுகவின் ஆட்சி அமையும் என அப்போது ஸ்டாலின் குறிப்பிட்டார்.
#தமிழகம்_மீட்போம்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் உரை. https://t.co/4SyQ0gl1y1
— M.K.Stalin (@mkstalin) November 29, 2020
Comments