10நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட தயாராகும் பிரிட்டன்..?

10நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட தயாராகும் பிரிட்டன்..?
10 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு பிரிட்டன் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 7 ஆம் தேதி வாக்கில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
7,8 மற்றும் 9 ஆம் தேதிகளுக்குள் இங்கிலாந்தில் உள்ள பெரும்பலான மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வந்து சேரும் எனவும் சொல்லப்படுகிறது.
முதல்கட்டமாக முன்கள சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், அடுத்த கட்டமாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இதர சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments