ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு நாளை தொடங்குகிறது.. இந்தியா தலைமையில் நடப்பதால் பாகிஸ்தான் புறக்கணிப்பு

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு நாளை தொடங்குகிறது.. இந்தியா தலைமையில் நடப்பதால் பாகிஸ்தான் புறக்கணிப்பு
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு நாளை தொடங்குகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான், ரஷ்யா மற்றும் பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளின் ஏழு பிரதமர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
மொத்தம் எட்டு உறுப்பு நாடுகளும் நான்கு பார்வையாளர் நாடுகளும் கொண்டது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு. இந்த மாநாட்டுக்கு குடியரசுத்துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமை தாங்குகிறார். பௌத்த பண்பாட்டை விளக்கும் கண்காட்சி ஒன்றும் மாநாட்டை ஒட்டி திறக்கப்படுகிறது.
Comments