பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம்..!

0 789
பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம்..!

பிரதமர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நாளை செல்கிறார்.

பிரதமரை வரவேற்பதற்காக வாரணாசி நகரம் தனது தொன்மையான கலாசார அடையாளங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கங்கைக் கரையில் தேவ தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.

பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்புக்காக கங்கையில் படகு சவாரிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ராஜா தலாப் பகுதியில் இருந்து பிரயாக்ராஜ் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை ஆறுவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம், சாரநாத் தொல்பொருள் ஆய்வு மையம் உள்ளிட்ட இடங்களுக்கும் பிரதமர் மோடி செல்ல திட்டமிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments