வரும் திங்கட்கிழமையன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளோடு நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்

சென்னையில், திங்கட்கிழமையன்று, தனது மக்கள் மன்ற நிர்வாகிகளோடு, நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில், திங்கட்கிழமையன்று, தனது மக்கள் மன்ற நிர்வாகிகளோடு, நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
தனது உடல்நலம் தொடர்பாக பரவிய தகவல்கள் குறித்து, கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதியன்று, டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினிகாந்த், தகுந்த நேரத்தில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, தனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிக்க இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளோடு, திங்கட்கிழமையன்று, நடிகர் ரஜினிகாந்த், ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இராகவேந்திரா மண்டபத்தில், காலை 9.30 மணிக்கு, இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும், மாவட்ட நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments