ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

0 1199
ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள சுருட்டப்பள்ளி, சிட்றபாக்கம் தடுப்பணைகள் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஒதப்பை தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி வழிகின்றன.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி ஆறு அணை முழுவதுமாக நிரம்பியதால் உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள சுருட்டப்பள்ளி, சிட்றபாக்கம் தடுப்பணைகள் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஒதப்பையில் உள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி வழிகின்றன.

நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளதால் ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறு ஓரமாக உள்ள 150 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments