வேலூர் மாவட்டத்தில் பொன்னை ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு

0 4165
வேலூர் மாவட்டத்தில் பொன்னை ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு

வேலூர் மாவட்டத்தில் பாயும் பொன்னை ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு தொடர்ந்து நீடிக்கிறது.

ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கலவகுண்டா அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் பாய்வதால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. மேலும் பொன்னை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கரையோர பகுதிகளில் உள்ளவர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments