யூ-டியூப்பில் வீடியோ பார்த்து ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் கொள்ளை - 2 பேர் கைது

0 12178
யூ-டியூப்பில் வீடியோ பார்த்து ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் கொள்ளை - 2 பேர் கைது

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் யூடியுப் வீடியோவை பார்த்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மில்   77 லட்சம் பணத்தை கொள்ளை அடித்த  2 பேரை கைது செய்து பணத்தை  போலீசார் மீட்டுள்ளனர்.

தாட்சேப்பள்ளியில் உள்ள வங்கியின் கீழ்த் தளத்தில் இருக்கும் ஏடிஎம் மையத்தில் கடந்த 21ஆம் தேதி  சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்து கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி, தெலங்கானாவை சேர்ந்த பிரசாத்,  வினை ராமுலுவை கைது செய்து பணத்தை   போலீசார் மீட்டனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  குண்டூர் புறநகர் காவல் மாவட்ட எஸ்.பி. விஷால் குன்னி, 2 கொள்ளையர்களும்  சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்தும்,  மிளகாய் பொடி தூவிய பின்னும் கொள்ளையடித்ததாகவும்,  இருப்பினும் தடவியல் மற்றும்  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  கைது செய்யப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments