குஜராத்தில் தடுப்பூசி குளிர்பதன வசதி திட்டம் - லக்ஸம்பர்க் அரசின் திட்டத்தை ஏற்றார் பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசியை குளிர்பதனப்பெட்டியில் வைத்து கொண்டு செல்ல உதவும் சிறப்பு ஆலையை குஜராத்தில் அமைக்கும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடான லக்ஸம்பர்கிடம் இருந்து பிரதமர் மோடி பெற்றுத் தந்துள்ளார்.
அதன்படி, சூரிய ஒளி மற்றும் மரபுசார் எரிசக்தி வாயிலாக மின்னூட்டம் பெறும் குளிர்பதன வசதி, பிரீசர்கள் மற்றும் கொண்டு செல்வதற்கான பெட்டிகள் உள்ளிட்டவற்றை லக்ஸ்ம்பர்கில்உள்ள B மெடிக்கல் சிஸ்டம் என்ற நிறுவனம் உருவாக்கும்.
இந்த திட்டம் முழுமையடைய இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால்,முதலில் குளிர்பதனப் பெட்டிகளை லக்ஸம்பர்கில் இருந்து நேரடியாக கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஞ்சிய திட்டப்பணிகள், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். இந்த வசதியால், நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் மனிதர்களும் கொரோனா தடுப்பூசியை பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் இந்தியா வர உள்ள இந்த குளிர்பதனப் பெட்டிகளில் வெப்பநிலை 4 டிகிரி முதல் மைனஸ் 20 டிகிரி வரை இருக்கும்.
Comments