கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் காரணமாக ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது

0 505
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் காரணமாக ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, இறையூர் - ராஜபாளையம் வழியில் அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இறையூர் -ராஜபாளையம் வழியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனால் ராஜபாளையம், மெய்யூர், மாலந்தூர் கரகம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தரைப் பாலம் அருகே பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments