சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 4125
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்விக் கட்டணத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரு மருத்துவக் கல்லூரிகளிலும் கல்விக்  கட்டணத்தை முறையே 5 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய், 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் என உயர்த்தியுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் 13 ஆயிரத்து 670 ரூபாய் என்பதைக் குறிப்பிட்டு அந்த அளவுக்கு இரு கல்லூரிகளிலும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற ஆண்டு வருமான வரம்பை 8 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments