திருமணத்திற்காக நடத்தப்படும் கட்டாய மதமாற்றங்கள் ? அவசரச் சட்டத்திற்கு உ.பி. ஆளுநர் ஒப்புதல்

0 1566
திருமணத்திற்காக நடத்தப்படும் கட்டாய மதமாற்றங்கள் ? அவசரச் சட்டத்திற்கு உ.பி. ஆளுநர் ஒப்புதல்

லவ் ஜிஹாத் என அழைக்கப்படும் திருமணங்கள் வாயிலாக நடப்பதாக கூறப்படும் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக உத்தரபிரதேச அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இந்த வரைவு அவசரச் சட்டத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இந்த வார துவக்கத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, மத மாற்றத்தை நோக்கமாக கொண்டு திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

அத்துடன் இது போன்ற திருமணங்கள் செல்லாதவை எனவும் அறிவிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments