கொரோனா அச்சுறுத்தல்: திருவண்ணாமலையில் இன்றும் நாளையும் கோவிலுக்குள் வர பக்தர்களுக்குத் தடை

0 1420
திருவண்ணாமலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்றும், நாளையும் கோவிலுக்கு வர, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்றும், நாளையும் கோவிலுக்கு வர, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நாளை அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.

விழா தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன், பக்தர்கள் கோவிலுக்குள் வர இன்றும் நாளையும் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

வெளியூர் பக்தர்கள் ஊருக்குள் வருவதைத் தடுக்க, திருவண்ணாமலை நகரைச் சுற்றிலும் 15 இடங்களில், காவல்துறை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நாளை மகா தீபத்தன்று மலை ஏறவும், கிரிவலம் செல்லவும்,  தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments