எம்.பி.யாகிறார் சுஷில் குமார் மோடி..!

எம்.பி.யாகிறார் சுஷில் குமார் மோடி..!
பீகார் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி போட்டியிடுவார் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
பீகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தேடுக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் கடந்த மாதம் காலமானார்.
இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு டிசம்பர் 14ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments