மொபைல் திருடர்களை விரட்டிப் பிடித்த உதவி ஆய்வாளர்.. நிஜ வாழ்க்கையின் ஹீரோ என காவல் ஆணையர் மகேஷ்குமார் பாராட்டு

0 4785
மொபைல் திருடர்களை விரட்டிப் பிடித்த உதவி ஆய்வாளர்.. நிஜ வாழ்க்கையின் ஹீரோ என காவல் ஆணையர் மகேஷ்குமார் பாராட்டு

சென்னையில், திருடப்பட்ட இருசக்கரவாகனத்தில் செல்லும் மொபைல் திருடர்களை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துரத்திச் சென்று மடக்கிப் பிடிக்கும் சிசிடிவி காட்சியினை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இது எந்த திரைப்படத்தின் காட்சியும் அல்ல; ஆனால் நிஜ வாழ்க்கையின் ஹீரோ உதவி ஆய்வாளர் அண்டிலின் ரமேஷின் நடவடிக்கை, மேலும் மூன்று குற்றவாளிகளைக் கைது செய்ய வழி வகுத்ததோடு, திருடப்பட்ட 11 மொபைல்களை மீட்டெடுக்கவும் வழிவகுத்ததாக பாராட்டி ஆணையர் ட்வீட் செய்துள்ளார்.

மாதவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் அண்டிலின் ரமேஷ் பணிமுடிந்து வீடு திரும்பும்போது இந்த மூவரும் பிடிபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments