70 வயதிலும் புத்தகம் சேகரிக்கும் அதிசய மனிதர்

0 780
70 வயதிலும் புத்தகம் சேகரிக்கும் அதிசய மனிதர்

அதிகாலை எழுந்து நாள் முழுவதும் புத்தகங்களை சேகரிக்க புறப்படுகிறார் 70 வயதான ஜோர்டான்நாட்டில் வசிக்கும் முகமது சலேம் அபு ஜக்காரியா.

தனது பழைய சரக்கு வாகனத்தில் ஏறி பழைய புத்தகக் கடைகள், காய்லான் கடைகள், குப்பை பொறுக்குபவர்களிடம் சென்று நிராகரிக்கப்பட்ட புத்தகங்களை சேகரிக்கிறார்.

அவற்றை எரித்துவிடாமல் சுத்தம் செய்து பயன்படுத்த தக்க நிலையில் உள்ள புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்குகிறார். புனித நூலான குரான் பிரதிகளை எடுத்து அங்கிருக்கும் வழிபாட்டுத் தலங்களில் விநியோகம் செய்கிறார்.

ஒரு நாட்டின் கலாசாரம், பண்பாடு புத்தகங்களில்தான் இருக்கிறது. அவை தெருவில் கிடப்பதை தம்மால் காண முடியாது என்றும் கூறுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments