இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காஸாவில் 10 லட்சம் பேர் பட்டினி - ஐ.நா சபை

இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காஸாவில் 10 லட்சம் பேர் பட்டினி - ஐ.நா சபை
இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காஸாவில் வசிக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் வறுமையின் பிடியில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.வின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு அறிக்கையில், பாலஸ்தீனத்திற்கு சொந்தமான காஸா பகுதி கடந்த 13 ஆண்டுகளாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
20 லட்சத்திற்கும் அதிகமானோர் காஸாவில் முற்றுகையில் இருப்பதாகவும், இந்த நிலைமை தொடர்ந்தால் நிலைமை மோசமாகி விடும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
Comments