கொரோனா பரவல் தடுப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

0 1174
கொரோனா பரவல் தடுப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்துதல் குறித்தும், தளர்வு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினருடன் அவர் இன்று கலந்தாலோசிக்க உள்ளார்.

காலையில் காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இதுகுறித்து விவாதிக்கும் முதலமைச்சர், பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருவதால் பொதுமுடக்கத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments