கொரோனா மருந்து பரிசோதனை, உற்பத்தியை இன்று நேரில் பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

0 1438
கொரோனா மருந்து பரிசோதனை, உற்பத்தியை இன்று நேரில் பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி புனே, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களுக்கு  இன்று நேரில் சென்று ஆய்வுகளை மேற்பார்வையிடுகிறார்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆய்வுகள் பன்னாட்டு மருந்து நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மூன்று ஆய்வுகள் முடிவடைந்து பரிசோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பின்விளைவற்ற மருந்துகள் விநியோகத்திற்கு தயாராக உள்ளன.

கொரோனா தடுப்பூசி மருந்துகளை முதல் கட்டமாக 30 கோடிப் பேருக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் , காவல்துறையினர் உள்பட தினசரி பத்து லட்சம் பேருக்கு இந்த மருந்தை விநியோகிக்க அரசு இயந்திரம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் மருந்து பரிசோதனைகளை நேரில் ஆய்வு செய்ய இன்று காலை 9.30 மணிக்கு பிரதமர் குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்கிறார். அங்கு அவர் Zydus cadila நிறுவனத்தில் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

தொடர்ந்து அவர் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா ஜெனக்கா நிறுவனம் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதை நேரில் காண உள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் செல்ல உள்ள பிரதமர் மோடி அங்குள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில், இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பு மருந்துக்கான முன்னேற்பாடுகளை பார்வையிட உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments