நிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 2044
நிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நிவர் புயல் மற்றும் கன மழை காரணமாக உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், இப்புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் காரணமாக 302 குடிசை வீடுகள், 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 1,439 குடிசை வீடுகள், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அந்த வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments