கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்க ஆளில்லை - உச்சநீதிமன்றம் அதிருப்தி

0 938
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்க ஆளில்லை - உச்சநீதிமன்றம் அதிருப்தி

கொரோனா வழிகாட்டும் நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை மேற்கொண்டது.

நீதிபதிகள் அசோக் பூஷண்,சுபாஷ் ரெட்டி, ஷா அடங்கிய அமர்வு, தீ விபத்து குறித்து குஜராத் மற்றும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதுபோன்ற தீ விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் கட்டளை இட்டனர்.

அப்போது பேசிய நீதிபதிகள், கொரோனா காலத்தில் ஊர்வலங்கள் நடக்கின்றன, 80 சதவிகித மக்கள் முகக்கவசம் அணிவதில்லை, மற்றவர்களின் தாடைகளில் தான் முகக்கவசங்கள் தொங்குகின்றன என்றனர்.

வழிகாட்டும் நெறிமுறைகள் இருந்தாலும், கடைபிடிக்கத்தான் ஆளில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments