பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு

0 1670
பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், முழுக் கொள்ளளவை எட்டியதால், 4 மதகுகள் மூலமாக, உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 

பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில் 34 அடி அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்ததோடு, 10 ஆயிரம் கனஅடி வீதமாக நீர்வரத்து தொடர்கிறது. இதையடுத்து, முதற்கட்டமாக, வினாடிக்கு 1000 கனஅடி வீதம், உபரிநீர் திறக்கப்பட்டது.

பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது முதல் இதுவரை 4 முறை மட்டுமே உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர் திறப்பை பார்வையிட்ட திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என,கோரிக்கை விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments