நிவரால் நிகழ்ந்த மாற்றம்... கடலில் இருந்து நிலக்கரி பொறுக்கும் வட சென்னை மக்கள்!

0 5107

நிவர் புயல் காரணமாக கப்பல்களில் இருந்து தூக்கி வீசப்பபட்ட நிலக்கரித் துண்டுகள் கரை ஒதுங்கி வருவதால் அவற்றை சேகரித்து வட சென்னை மக்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

சென்னையில் கடந்த 25- ஆம் தேதி  நிவர் புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து . கடல் கொந்தளிப்புடன் காட்சியளித்தது  சென்னை கடலில்  பத்து மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இதனால்,  சென்னை துறைமுகம்,  எண்ணூர் துறைமுகம் அனல் மின் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நிலக்கரி துண்டுகள் காற்றில் வீசப்பட்டு கடலில் விழுந்தன. 

தற்போது, இந்த நிலக்கரிகள் கடல் தண்ணீரில் கரைந்து துண்டு துண்டுகளாகி கடற்கரையில் ஒதுங்கி வருகின்றன.  காசிமேடு நாகரா தோட்டம் புதுவண்ணாரப்பேட்டை சூரிய நாராயண சாலை கடல் பகுதிகளில் ஏராளமான குவியல் குவியலாக கரித்துண்டுகள்  கிடைக்கின்றன.

தற்போது, அந்த பகுதி மக்கள் இந்த நிலக்கரிகளை ஆர்வமுடன் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர் . புயல் ஓய்ந்த பின்பும் வட சென்னை கடல் பகுதியில் நிலக்கரி துண்டுகள் பரவலாக கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் சிறுவர்கள் மூட்டை மூட்டையாக நிலக்கரியை சேகரித்து கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments