மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?... மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? ...மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
புகழ்பெற்ற சுற்றுலா தளமான மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், உரிய பதிலளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளது.
வழக்கின் முந்தைய விசாரணையின் ஒதுக்கப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாமல்லபுரம் உட்பட நாட்டில் உள்ள 16 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 5109 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மாமல்லபுரத்திற்கு மட்டும் எவ்வளவு நிதி என குறிப்பிட்டு சுட்டிக்காட்ட அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ம் தேதி ஒத்திவைத்தனர்.
Comments