மெரினா கடற்கரையில் முழங்கால் அளவுக்குக் குளம்போல் தேங்கிய மழைநீர்

0 3926

சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் மழைநீர் குளம்போல் தேங்கிநின்ற நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் பொக்லைன் மூலம் கால்வாய் தோண்டி அதைக் கடலில் வழிந்தோடச் செய்தனர்.

நிவர் புயலின் காரணமாகச் சென்னையில் திங்கள் இரவு முதல் 2 நாட்கள் கனமழை பெய்தது. இதனால் விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மெரினா கடற்கரையில் மணற்பரப்பிலும், அணுகுசாலையிலும் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியிருந்தது.

முழங்கால் அளவுக்குத் தேங்கியிருந்த நீரை வடிய வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் பொக்லைன் உதவியால், நீர்தேங்கிய இடத்தில் இருந்து கடல்வரை அகலமான கால்வாய் தோண்டப்பட்டது. தேங்கிய நீர் அனைத்தும் அந்த வழியாக வேகமாகப் பாய்ந்து கடலுக்குச் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments