திருப்பூர் அருகே குளத்தில் தவறி விழுந்த இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0 196

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, உடன்பிறந்த சிறுமிகள் இருவர் குளத்திற்குள் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரது 9 வயது மகள் மைதிலி, 6 வயது மகள் ஜீவிதா ஆகிய இரண்டு சிறுமிகளும் அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

சிறுமிகள் இருவரும், கருமாப்பாளையத்தில் அவர்களது தாத்தா வேலைபார்த்துக் கொண்டிருந்த தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகே உள்ள குளத்திற்குள் சிறுமிகள் இருவரும் தவறி விழுந்துவிட்டனர்.  நீரில் மூழ்கிய சிறுமியரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments